முகப்பு
உலகம்

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து...

Updated On : 1 மார்ச் 2026, 12:09 pm IST
ஈரான் தாக்குதல் - படம்: AP
பகிர்:

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் ஒரு மகளிர் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதில் 148 பேர் உயிரிழந்தனர். 95-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் நகர் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் மகளிர் பள்ளி மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 148 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ளது.

ஆனால், ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் தங்கள் தரப்பில் எவ்வித உயிரிழப்போ, பெரும் சேதமோ ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்தது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.

அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலால், ஈரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும், பெரும்பாலான பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

summary

The death toll from the attack on an Iranian school by joint US-Israeli forces has risen to 148.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments