ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதலை நடத்துவோம்: டிரம்ப் மிரட்டல்!
ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குத நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 8 அன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.
பின்னர், ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மோதல்கள் துவங்கிய 2 ஆவது நாளான இன்று (ஜூன் 11) பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத்சோசியல் சமூக வலைதளப் பதிவில், ”அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப்போகிறது. ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், விமான எதிர்ப்பு உள்பட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், தாக்குதல் திறனும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. வருங்காலத்தில் வெகு சீக்கிரமே வெனிசுலாவைப் போல ஈரானின் கார்க் தீவை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல, மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளை கைப்பற்றி எரிவாயு சந்தையை நாங்கள் கட்டுப்படுத்துவோம். வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே தற்போது அது நன்றாக வேலை செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், மீண்டும் போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
We will launch a heavy attack on Iran tonight: Trump threatens!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.