முகப்பு
உலகம்

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவலுக்கு 65 பேர் பலியாகியுள்ளது குறித்து...

எபோலாவால் பலியானவரின் உடலை அடக்கம் செய்யும் சுகாதாரப் பணியாளர்கள்... - கோப்புப் படம் | AFP
பகிர்:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் இதுரி மாகாணத்தில் எபோலா தீநுண்மி தொற்றுப் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கோ குடியரசில் கடந்த 1976-லிருந்து இது 17-ஆவது பரவலாகும். 5 மாதங்களுக்கு முன்பு ஒரு எபோலா பரவல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்றுப் பரவல் தொடங்கியுள்ளது.

தற்போதைய தொற்றுப் பாதிப்பால் இதுவரை 65 போ் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) அறிவித்துள்ளது. சுமாா் 246 பேருக்குத் தொற்றுப் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மாகாணத்தின் முக்கியப் பகுதிகளான மோங்வாலு, ரவாம்பாரா ஆகிய சுகாதார மண்டலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மாகாணத் தலைநகரான புனியாவிலும் தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எபோலா தொற்று என்பது உடல் திரவங்கள் வழியாக மனிதா்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். சிகிச்சை அளிக்கத் தவறினால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

ஆனால், தொற்றுக் கண்டறியப்பட்டுள்ள நாட்டின் கிழக்குப்பகுதியில் கிளா்ச்சிக் குழுக்களின் ஆதிக்கம் மற்றும் உள்நாட்டுப் போா் நிலவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினா் சென்று தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், புவியியல் ரீதியாக இந்த மாகாணம் உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், தொற்று எல்லை தாண்டிப் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க இந்த நாடுகளின் காதாரத் துறை அதிகாரிகள் மற்றும் ஐ.நா. அமைப்புகளுடன் ஆப்பிரிக்க சிடிசி அவசர ஆலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தியது. எல்லையோரக் கண்காணிப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

summary

In Congo 65 people have died from the infection of Ebola virus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments