இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பரிசளித்த பிரதமர் மோடி! என்ன தெரியுமா? விடியோ
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ஆச்சரியமான பரிசு கொடுத்த பிரதமர் மோடியின் விடியோ வைரலானது.
ரோம் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பின்போது, மெலோனிக்கு மிக ஆச்சரியமான பரிசு ஒன்றை மோடி அளித்தார்.
இந்த பரிசைப் பார்த்த மெலோனி, மிகுந்த உற்சாகம் அடைந்ததோடு, அந்த பரிசு பெற்ற தருணத்தை விடியோவாகப் பதிவு செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததோடு, பரிசளித்த பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கிளம்பும்போது, அவர் ஒரு பாக்கெட் மெலோடி சாக்லேட் வாங்கிச் சென்றிருக்கிறார். அதனை மெலோனிக்கு பரிசாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இது அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த விடியோவில், இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசை வாங்கி வந்துள்ளார். அது மிக ருசியான சாக்லெட் - மெலோடி என்று கூறி புன்னகைக்கிறார். அப்போது, அந்த சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி விடியோவில் காண்பிக்கிறார். இருவரும் இணைந்து மெலோடி என்று கூறி சிரிக்கிறார்கள்.
ஏற்கனவே மோடி - மெலோனி பெயர்களை சேர்த்தால் மெலோடி என்று வரும் என முந்தைய சந்திப்புகளின்போதே இரு தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.
தற்போது பிரதமர் மோடி, ஐந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்றிருக்கும் நிலையில், ரோம் நகரில் இத்தாலி பிரதமர் மெலோனியை சந்தித்தபோது, மெலோடி சாக்லேட்டை பரிசாகக் கொடுத்திருப்பது வைரலாகியிருக்கிறது.
இத்தாலி தலைநகருக்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்று சில புகைப்படங்களுடன் மெலோனி பதிவிட்டிருந்தார். அதில், நண்பரே, ரோம் நகருக்கு வரவேற்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு ரோம் நகரில் இத்தாலி பிரதமரை சந்தித்து அவருடன் இரவு உணவருந்திய பிரதமர் மோடி, அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
A video of Prime Minister Modi giving a surprise gift to Italian Prime Minister Meloni has gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.