மெலோனிக்கு மோடி அளித்த பரிசால் பார்லே நிறுவனப் பங்குகள் கிடுகிடு உயர்வு!
இத்தாலி பிரதமருக்கு பிரதமர் மோடி அளித்த மெலோடி சாக்லேட் பரிசால் பார்லே நிறுவனப் பங்குகள் உயர்ந்துள்ளது குறித்து...
அரசு முறைப் பயணமாக ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மொலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மெலோனி மற்றும் மோடி என இருவரின் பெயர்களையும் சேர்த்தால், மெலோடி என வருவதாக இணையத்தில் இதற்கு முன்பே பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது மெலோடி சாக்லேட்டுகளை மெலோனிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இத்தாலி பிரதமர் மெலோனி விடியோவாகப் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை இதுவரை 10 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால் சர்வதேச அளவில் பலர் மெலோடி சாக்லெட் குறித்து தேடத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் மெலோடி குறித்த பதிவுகள் அதிகரித்து வருகிறது.
இதன் விளைவு, இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மொலோடி சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான பார்லேவின் பங்குகள் 5% வரை அதிகரித்துள்ளது.
பார்லே நிறுவனம் மெலோடி சாக்லேட்டுகளை மட்டுமின்றி, பார்லே-ஜி, மொனாக்கோ, கிராக்ஜாக், மேங்கோ பைட், பாப்பின்ஸ் போன்ற இனிப்புகளைத் தயாரித்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து எந்தவித ஏற்றத்தையும் சந்திக்காமல் இருந்த பார்லே, இத்தாலி பிரதமருக்கு பிரதமர் மோடி வழங்கிய மெலோடி சாக்லேட் பரிசால், 5% வரை ஏற்றம் கண்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 4.84 ஆக இருந்த நிலையில், பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி ரூ. 5 ஆக அதிகரித்தது. வணிக நேர முடிவில் கிடுகிடுவென உயர்ந்து ரூ. 17.44ஆக அதிகரித்தது. பலரும் நெஸ்லேவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மெலோடி சாக்லேட்டுகளை 43 ஆண்டுகளாக பார்லே நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான ஏற்றத்தை பார்லே நிறுவனம் இன்று சந்தித்துள்ளது.
இரு நாட்டு பிரதமர்கள் நட்பு ரீதியாக பரிமாறிக்கொண்ட சிறிய பரிசு, ஒரு நிறுவனத்தின் லாபத்தில் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய தாக்கத்திற்கு பார்லே நிறுவனம் உதாரணமாகியுள்ளது என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Parle stock jumps after PM Modi gifts Giorgia Meloni Melody toffees
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.