வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு
வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தைகள் சரிவுடன் வணிகம்
வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை, பல்வேறு வணிக அழுத்தங்கள் காரணமாக, பங்கு விற்பனை அதிகரித்து, கடும் சரிவுடன் பங்குச் சந்தைகள் வணிகத்தை த் தொடங்கியிருக்கின்றன.
இன்று காலை 9.17 மணியளவில் நிப்டி 1.22 சதவிகிதம் குறைந்து 23,081 அளவுக்கும், சென்செக்ஸ் 1.12 சதவிகிதம் குறைந்து 73,397 என்ற அளவிலும் வணிகத்தைத் தொடங்கின.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிலையற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை போன்றவை, பங்குச் சந்தைகளில் இன்று எதிரொலித்ததன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இன்று காலை பெரு நிறுவனங்கள் தவிர்த்து சிறு நிறுவனப் பங்குகள் உள்பட அனைத்துத் துறைகளும் சரிவுடன் வர்த்தகமாயின.
ஆரம்ப வணிகத்தின்போது 1.78% சரிவுடன் நீடித்த உலோகத் துறை, அதனைத் தொடர்ந்து ரியால்டி, பாதுகாப்பு மற்றும் ஆட்டோ துறைகளிலும் சரிவுகள் தொடங்கின.
நிஃப்டி சிறு நிறுவனப் பங்குகள் 250 கிட்டத்தட்ட 0.85% சரிந்தும், நிஃப்டி நடுத்தர நிறுவனப் பங்குகள் 150 சுமார் 0.96% வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது.
திங்கட்கிழமை சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கான மூன்று காரணங்களாக, தகவல் தொழில்நுட்பப் பங்குகள் சரிவு, தங்க விலையில் மாற்றம், சர்வதேச போர் பதற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அமைந்துள்ளன.