FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!

சென்செக்ஸ் 331.62 புள்ளிகள் சரிந்து 76,059.77 புள்ளிகளாகவும் நிஃப்டி 102.15 புள்ளிகள் சரிந்து 23,767.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 24 ஜூலை 2026, 5:30 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க வர்த்தக வரிகள் குறித்த அச்சத்தால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

தொடர்ந்து ளெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் எச்டிஎஃப்சி வங்கி பங்கில் மேற்கொண்ட விற்பனையும் இந்திய பங்குச் சந்தை வெகுவாக பாதித்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 916.96 புள்ளிகள் சரிந்து 75,474.43 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 331.62 புள்ளிகள் சரிந்து 76,059.77 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 102.15 புள்ளிகள் சரிந்து 23,767.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் எடர்னல், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் எச்சிஎல் டெக், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

பொருளாதாரச் சூழலில் நிலவும் தொடர் நிச்சயமற்ற தன்மையால், அதன் ஆண்டு வருவாயின் மேல் எல்லையை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இன்ஃபோசிஸ் குறைத்ததைத் தொடர்ந்து, அதன் பங்கின் விலை 1 சதவீதம் சரிந்தது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க வர்த்தக வரிகள் குறித்த அச்சத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. எரிசக்தி சந்தைகளில் அழுத்தம் தணிவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், ஆசிய சந்தைகள் முழுவதும் நிலவிய பலவீனம் வலுப்பெற்றதால், பரவலான விற்பனையை இது தூண்டியது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் இருப்பது குறியீடுகள் மற்றும் வளர்ச்சி நிலவரங்களை எதிர்மறையாக செயல்ப்படக்கூடும் என்ற அச்சமும் தொற்றிக்கொண்டது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 2,999.23 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.72 சதவீதம் சரிந்தன. அதே வேளையில். ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஐரோப்பியச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் வியாழக்கிழமையன்று சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய், முந்தைய அமர்வில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்திருந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 3.66 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 96.98 டாலராக உள்ளது.

summary

Market benchmark indices Sensex and Nifty ended lower on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments