FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேற்கு ஆசிய மோதல் எதிரொலி: மீண்டும் சரிந்த இந்திய பங்குச் சந்தை!!

சென்செக்ஸ் 382.62 புள்ளிகள் சரிந்து 76,132.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 118.55 புள்ளிகள் சரிந்து 23,779.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

15 வினாடிகள் முன்பு
சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்
பகிர்:

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா-ஈரான் இடையிலான அதிகரிக்கும் பதற்றம் மற்றும் அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த அச்சத்தால், இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தின் சென்செக்ஸ் 544.91 புள்ளிகள் சரிந்து 75,970.52 புள்ளிகள் வரை வர்த்தகமானது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 382.62 புள்ளிகள் சரிந்து 76,132.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 118.55 புள்ளிகள் சரிந்து 23,779.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், மாருதி மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

Advertisement

Advertisement

நிஃப்டி-யில் இன்ஃபோசிஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டெக் மஹிந்திரா, ஜியோ ஃபைனான்சியல், ஹெச்டிஎஃப்சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், பார்தி ஏர்டெல், எல்&டி, கோல் இந்தியா, மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

மருந்துவத் துறை பங்குகள் சுமார் 0.75% உயர்ந்த நிலையில், மற்ற அனைத்துத் துறைசார் குறியீடுகளும் சரிவுடன் நிறைவடைந்தன. தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகம், பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பங்குகள் 1 முதல் 2.8 சதவீதம் வரை சரிந்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால், இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. அதே வேளையில், பங்குச் சந்தையில் 'ரிஸ்க்-ஆஃப்' நிலை நிலவியதால், வர்த்தக நேரம் முழுவதும் பங்குச் சந்தை அழுத்தத்தில் இருந்தது.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 4.61 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2.12 சதவீதமும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் உயர்ந்தன. ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 3,111.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.61 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 96.87 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty ended lower on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments