10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!
பிரதமர் நரேந்திர மோடி மெலோடி சாக்லேட்டுகளை பரிசளித்துள்ளதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிவிட்டுள்ள விடியோ 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மெலோடி சாக்லேட்டுகளை பரிசளித்துள்ளதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிவிட்டுள்ள விடியோ 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பரிசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு மெலோனி பகிர்ந்துள்ள விடியோவில், பார்லே நிறுவனத்தின் மெலோடி சாக்லேட் பாக்கெட்டை மெலோனிக்கு பிரதமர் மோடி பரிசளிக்கிறார்.
மெலோனி மற்றும் மோடி என இருவரின் பெயர்களையும் சேர்த்தால், மெலோடி என வருவதாக இணையத்தில் இதற்கு முன்பே பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது மெலோடி சாக்லேட்டுகளை மெலோனிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஐக்கிய அரபு அமீரகம், ஸ்வீடன், நார்வே உள்பட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நார்வே பயணத்தைத் தொடர்ந்து, இத்தாலிக்கு பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டுத் தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மோடி இன்று சந்தித்து பேசினார்.
இதில், இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு, வணிகம், பரஸ்பர ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். இதனை விடியோவாகவும் மெலோனி பதிவு செய்துள்ளார். இதனை எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெலோனி பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசை வாங்கி வந்துள்ளார். அது மிக ருசியான சாக்லெட் - மெலோடி என்று கூறி மோடியுடன் புன்னகைக்கிறார். அப்போது, அந்த சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி விடியோவில் காண்பிக்கிறார். இருவரும் இணைந்து மெலோடி என்று கூறி சிரிக்கிறார்கள்.
இந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். எக்ஸ் தளப் பக்கத்தில் 74 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
Video of PM Modi gifting Melody toffees to Italian PM Meloni crosses 100 million views
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.