ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!
மோடி - மெலோனி சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாட்டில், பிரதமர்கள் மோடி - மெலோனி சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பல உலகத் தலைவா்கள் பங்கேற்றனா்.
செவ்வாயன்று, உலகத் தலைவர்களின் குழு புகைப்படத்தின்போது, பிரதமர் மோடி, இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்திப்பு விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
Advertisement
Advertisement
பிரான்ஸில் நடைபெற்று முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடியிடம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகப் பிரபலமான ஜோடி என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய விடியோ வைரலாகியிருந்தது.
நேற்று முழுக்க இந்த விடியோ வைரலாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு காரணத்துக்காக இன்று அந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதற்குக் காரணம், இந்திய பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருவரும் சந்தித்து பரஸ்பரம் பேசிக் கொண்டிருக்கும்போது, அருகில் நின்று கொண்டிருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு தலைவர்களின் உரையாடலையும் பார்த்து மகிழ்ச்சியோடு புன்னகைப்பதையும் நெட்டிசன்கள் கவனிக்கத் தவறவில்லை.
சமூக வலைத்தளங்களில் இன்று, மெலோடி சந்திப்பு நிகழ்வுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் ரியாக்ஷன் என்ற குறிப்புகளுடன் புகைப்படங்களும் விடியோக்களும் வைரலாகியிருக்கிறது.
இந்த விடியோவைப் பார்த்த பலரும் அதற்கு தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
மெலோனி + மோடி = மெலோடி!
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி - பிரதமர் மோடியின் பெயர்களை ஒன்றிணைத்தால் மெலோடி என்று வரும். இது குறித்து 2023 முதலே வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இரு நாட்டுப் பிரதமர்களும் முக்கிய சந்திப்புகளின்போது பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் விடியோக்கள் அதிக பார்வைகளை பெற்று வந்தன.
அதுபோலவே, கடந்த 2024ஆம் ஆண்டு மெலோனி, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் ஒருசெல்ஃபி எடுத்து அதனை இனிய நண்பர்களே, நாங்கள் மெலோடி என்று பதிவிட்டிருந்தார்.
2025ஆம் ஆண்டு ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட விடியோவைப் பகிர்ந்து ஹல்லோ, மெலோடி டீம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், ஒரு சில வாரங்களுக்கு முன்பு, மெலோடி சாக்லேட் குறித்த விடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து தனிக்கவனம் ஈர்த்தது
தற்போது, உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமா் மோடி பங்கேற்றிருந்தார். இந்த உச்சி மாநாட்டில் மெலோனி - மோடி சந்திப்பு விடியோக்களும் வைரலாகின.
Melodi's conversation at the G7 summit That smile of Jaishankar's is going viral!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.