நடிகை க்ரித்தி சனோன் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் நடிகர் தனுஷ் கூட்டணி மூன்றாவதாக இணைந்த திரைப்படம் தேரே இஷ்க் மெய்ன். ராஞ்சனா திரைப்படத்தின் உலகத்துடன் தொடர்புடைய படமாக இது இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதில் கதாநாயகியாக நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகளிலும் அழுத்தமான வசனங்கள் மற்றும் உடல்மொழியால் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய க்ரித்தி சனோன், “தேரே இஷ்க் மெய்ன் படம் என்னை ரொம்ப பாதித்தது. படப்பிடிப்பிலும் அது முடிந்த பின்பும் அக்கதாபாத்திரத்தின் தாக்கம் அப்படியே இருந்தது. என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிருத்விராஜின் விலாயத் புத்தா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.