அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

News image

சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை - கோப்புப் படம்.

Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

மும்பை: பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியாதலும், அமெரிக்க சந்தைகளில் உறுதியான போக்கு நிலவியதாலும், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து சாதனை படைத்தது.

காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,062.4 புள்ளிகள் உயர்ந்து 79,218.19 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்து 23,907.25 முடிந்தது.

ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி மற்றும் டெக் பங்குகள் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் சந்தை உணர்வை மேலும் மேலும் இது அதிகரிக்க செய்தது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியாலிட்டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இன்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி-யில் பொதுத்துறை நிறுவன வங்கி பங்குகள் இன்று 2.47 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்தும், பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டு உயர்ந்து வர்த்தகமானது.

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி பங்குகள் 3.17 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.16 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.05 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதம் உயர்ந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (நேற்று) வியாழக்கிழமை ரூ.5,320.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,200.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்து முடிந்த வேளையில், ஷாங்காய், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.37 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.