இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் மோதல்: நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு!

நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி.

News image
Updated On :27 நவம்பர் 2016, 10:41 am

DIN

சென்னை: நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.   

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமானது சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. தற்பொழுது சங்க தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக் கணக்கான நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும், அடுத்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பொதுக் குழு கூட்ட அரங்கிலும், அதற்கு வெளியேயும் 'திடீர்' தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் காரணமாக உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அடையாள அட்டை இல்லாத சில சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

மோதல் அதிகரித்ததால் பாதுகாப்பிற்காக நடிகர் சங்கத்தின் நுழைவாயிலை அங்கிருந்த போலீசார் இழுத்து மூடினர். மேலும் அடையாள அட்டை இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள்.  இந்த அமளியில் சங்க வளாகத்திற்கு வெளியே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கருணாஸின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.