பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

மாவீரன் கிட்டு' படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்: இயக்குனர் சுசீந்திரன்!

தான் இயக்கி வெளியாகவுள்ள 'மாவீரன் கிட்டு' படத்துக்காக தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:31 pm IST

தான் இயக்கி வெளியாகவுள்ள 'மாவீரன் கிட்டு' படத்துக்காக தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டார்.

விஷ்ணு விஷால், பார்த்திபன்ஸ்ரீ, திவ்யா, சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலரது நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு  காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்து இருக்கிறார். இந்தபபடத்தை சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சமுத்திரகனி வெளியிட, டீஸரை இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

இவ்விழாவில் சுசீந்திரன் பேசியது, "நான் இதற்கு முன்பு இயக்கி தயாரித்த 2 திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள 'மாவீரன் கிட்டு' படத்தின் டீஸரையும் இங்கு வைத்து வெளியிடுகிறேன்.

முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரசாமி எனக்கு நண்பரானார். 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போல் 'மாவீரன் கிட்டு' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.