ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2010-17 டாப் 10 படங்கள்: ஆச்சர்ய தகவல்கள்!

News image
Updated On :26 டிசம்பர் 2017, 11:04 am

எழில்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்கில், கடந்த வருடம் வரை டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருந்த எந்திரன் படம் இந்த வருடம் கீழே இறங்கிவிட்டது.

வெற்றி திரையரங்கில் அதிகம் பேர் பார்த்த படம் என்கிற பெருமையை இந்த வருட ஏப்ரலில் வெளியான பாகுபலி 2 படம் தட்டிச்சென்றுள்ளது. 2010-ல் வெளியான எந்திரன் கடந்த ஏழு வருடங்கள் வரை முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் பாகுபலி 2 படத்தினால் அது இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிட்டது.  

படம் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை முன்வைத்து 2010 முதல் 2017 வரையிலான டாப் 10 பட்டியலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பாகுபலி 2, எந்திரன் முதலிரண்டு இடங்களைப் பிடித்த நிலையில், பாகுபலி-யின் முதல் பாகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான மெர்சல் படம் 4-ம் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் மெர்சல், துப்பாக்கி, நண்பன் என மூன்று விஜய் நடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி திரையரங்கில் கபாலி படத்தை விடவும் தனி ஒருவன் படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளார்கள் என்பதும் மற்றொரு ஆச்சர்யத் தகவல்.

2010 - 2017: டாப் 10 படங்கள்

1. பாகுபலி 2
2. எந்திரன்
3. பாகுபலி
4. மெர்சல்
5. தனி ஒருவன்
6. கபாலி
7. துப்பாக்கி
8. கோ
9. மங்காத்தா
10. நண்பன் 

2017 டாப் 10 படங்கள்

1. பாகுபலி 2
2. மெர்சல்
3. விக்ரம் வேதா
4. பைரவா
5. விவேகம்
6. சி3
7. தீரன்
8. கவண்
9. வேலையில்லா பட்டதாரி 2
10. வேலைக்காரன்*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.