அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'பீச்சாங்கை' படத்தின்  கதாநாயகி அஞ்சலி ராவ்!

தென் இந்திய அழகி போட்டியில்  'சிறந்த புன்னகை' பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ்,

News image
Updated On :4 மார்ச் 2017, 5:39 am

DIN

தென் இந்திய அழகி போட்டியில்  'சிறந்த புன்னகை' பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது 'பீச்சாங்கை' படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் 

'அச்சம் என்பது மடமையடா'  திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA பட்டதாரியான அஞ்சலி ராவ்,  தற்போது  'பீச்சாங்கை' திரைப்படம் மூலம் கதாநாயகியாக உருவாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் 'பீச்சாங்கை' திரைப்படத்தில் புதுமுகம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

Story image

'நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதல்தான் என்னை பல விளம்பர படங்களிலும், வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிப்பதற்கு பக்கபலமாய் இருந்தது. பல திரைப்படங்களில்  நான் நடித்திருந்தாலும், முதல் முறையாக நான் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் இந்த 'பீச்சாங்கை' தான்.  நான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அபிராமி. தந்தையோடு  இணைந்து ஒரு தொலைபேசி கடை நடத்தி வரும் அபிராமியின் கதாபாத்திரம் இந்த  படத்தில் மிக முக்கிய பங்கு  வகிக்கும்.  அவ்வப்போது திடீர் திடீர் முடிவுகளை எடுக்கும் மனோபாவத்தை கொண்டு இருக்கும்  அபிராமிதான், பீச்சாங்கை கதைக்கு முக்கியமான திருப்புமுனை' என்று உற்சாகமாக கூறுகிறார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகி அஞ்சலி ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.