/

விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2: புதிய தகவல்கள்

முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். கூடவே கீர்த்தி சுரேஷும்...

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 5:46 am

எழில்

விக்ரம், இயக்குநர் ஹரி ஆகிய இருவருக்கும் பெரிய திருப்புமுனையை அளித்த படம் - சாமி. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாராகிவிட்டார் ஹரி.

முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். கூடவே கீர்த்தி சுரேஷும் விக்ரம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் வில்லனாக நடிக்கவிருப்பவர், பாபி சிம்ஹா. பிரபு, சூரி ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.