கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

முடிவை நெருங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி: ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை வெல்லப்போகிறவர் யார்?

ஐந்து பேரில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெல்லப்போகிறவர் யார்? யாருக்கு அந்த ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை?

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 9:47 am

எழில்

சிநேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆரவ், பிந்து, ஹரிஷ்.

இந்த ஐந்து பேரில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெல்லப்போகிறவர் யார்? யாருக்கு அந்த ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தனது கடைசி வாரத்தை எட்டியுள்ளது. வருகிற ஞாயிறன்று நடைபெறுகிற இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

கடைசி வாரப் போட்டியாளர்களாக கவிஞர் சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஒருவர் இந்த வார நடுவில் வெளியேற்றப்படுகிறார். பிறகு மீதமுள்ள 4 பேரும் இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களில் இருந்து ஒருவர் வெற்றியாளராக வருகிற ஞாயிறு அன்று நடைபெறுகிற நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்த ஐந்து பேரில் சிநேகன் கடைசி 4 பேரில் ஒருவராக நேரடியாகத் தேர்வாகியுள்ளார். எனவே கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகிய நால்வரிலிருந்து மூவர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகவுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை சிநேகன் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உண்டாகியுள்ளது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நடக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை இருவரில் ஒருவருக்குக் கிடைக்கவே அதிக வாய்ப்புண்டு. ஆரவுக்கு ரசிகைகள் அதிகம் உள்ளதால் அவரும் கடுமையான போட்டியை உருவாக்கக்கூடும். இன்றைய நிலைமையில் பிந்து, ஹரிஷ் ஆகிய இருவருக்கும் மக்கள் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு. நிகழ்ச்சியின் பாதியில் நுழைந்ததும் இதற்கான முக்கியக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை இந்த ஒரு வாரத்தில் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருவரும் நடந்துகொண்டால் போட்டியில் புதிய திருப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. 

இறுதிச்சுற்று பிரமாண்டமான முறையில் நடைபெறும் என கமல் அறிவித்துள்ளார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளார்கள். வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்குபெற சம்மதிக்காத நடிகை ஓவியா, இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். 

நேற்றுடன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் சிவ பாலாஜி வென்று ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.