கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ஜவுளிக்கடை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவின் புகைப்படங்கள்!

என் குணத்துக்காக என் மீது அன்பைச் செலுத்துகிறார்கள். இதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்....

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 10:15 am

எழில்

சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய ஃபேமிலி ஷாப்பிங் மால் இன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பிக் பாஸ் மூலம் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா கலந்துகொண்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஓவியாவை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓவியா பேசியபோது: எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. என் மீது இத்தனை ரசிகர்கள் அன்பு செலுத்தும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்கவேண்டும்? ரசிகர்களின் இதுபோன்ற அன்பைப் பார்ப்பது இந்தக் காலத்தில் கஷ்டம். என் குணத்துக்காக என் மீது அன்பைச் செலுத்துகிறார்கள். இதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். பிக் பாஸ் 100-வது நாள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன். அப்போது ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பாடிய கொக்கு நெட்ட கொக்கு நெட்ட பாடலை, ரசிகர்களுக்காகப் பாடிக் காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஓவியாவின் ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.