யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் காலமானார்!

250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்...

Published On :

பாயும்புலி, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆர்.என். சுதர்சன் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருகு வயது 78.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1939-ம் ஆண்டு பிறந்த சுதர்சன், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ், கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குநர். சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துறையில் பணியாற்றியவர்கள். 2008-ல் மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசியராகவும் 2012-ல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார்கள்.

250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சைலாஸ்ரீ என்கிற மனைவி உள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.