ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பத்மாவத்: இந்தியாவில் ரூ. 200 கோடியைத் தாண்டிய வசூல்!

சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூலித்த படம் பத்மாவத் தான்...

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 12:18 pm

எழில்

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. குர்கான், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. நேற்று வரை இந்தப் படம் இந்தியாவில் ரூ. 213 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. சில மாநிலங்களில் வெளியாகாவிட்டாலும் கடந்த வெள்ளியன்று ரூ. 10 கோடியும் சனிக்கிழமை ரூ. 16 கோடியும் ஞாயிறன்று ரூ. 20 கோடியும் வசூலித்து இரண்டாவது வார இறுதியிலும் மகத்தான வரவேற்பைக் கண்டுள்ளது. 

சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூலித்த படம் பத்மாவத் தான். வரும் நாள்களில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வசூலையும் தாண்டிவிட்டால் தீபிகா படுகோனின் படங்களிலும் அதிக வசூலித்த படமாக இது இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.