நடிகை ஸ்ரேயாவுக்கு ரஷ்ய காதலருடன் விரைவில் திருமணம்?
பிரபல நடிகை ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...


பிரபல நடிகை ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரேயா, ரஷ்யாவைச் சேர்ந்தவரைத் தற்போது காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய காதலரை மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக ஸ்ரேயா ரஷ்யாவுக்குச் சென்றுள்ளதாகவும் காதலரின் குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்ச் மாதம் ராஜஸ்தானில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் திருமணச் செய்தி குறித்து ஸ்ரேயா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...