ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பொங்கல் தினத்தில் அறிவிப்புகள்: ‘கதாநாயகி’ ஜூலி தகவல்!

எனக்கு இந்தப் படத்தில் வலுவான கதாபாத்திரம். வேறு எந்தத் தகவல்களையும் இப்போதைக்குச் சொல்லமுடியாது... 

News image
Updated On :5 ஜனவரி 2018, 7:12 am

எழில்

பிக் பாஸ் புகழ் ஜூலி, தற்போது கதாநாயகி ஆகியுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்துள்ள ஜூலி ஒரு பேட்டியில் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது: எனக்கு இந்தப் படத்தில் வலுவான கதாபாத்திரம். வேறு எந்தத் தகவல்களையும் இப்போதைக்குச் சொல்லமுடியாது. பொங்கல் அன்று படம் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும். அதன்பிறகு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார். ஜூலிக்கு ஜோடியாக தப்பாட்டம் படத்தில் நடித்த சுதாகர் நடிக்கவுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். தற்போது கதாநாயகியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.