யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நான்கு நாள்களில் ரூ. 200 கோடி: சீனாவில் வசூல் மழை பொழியும் அமீர் கான் படம்!

டங்கல் பட வசூலை சீக்ரெட் சூப்பர்ஸ்டார் தாண்டுமா என்கிற ஆவலை முதல் நான்கு நாள் வசூல் உருவாக்கியுள்ளது...

News image
Updated On :23 ஜனவரி 2018, 10:43 am

எழில்

அமீர் கான் நடித்து தயாரித்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவிலும் இந்தியர்கள் வாழும் இதர நாடுகளிலும் வெளியானது. அத்வைத் சந்திரன் இயக்கத்தில் ஜைரா வாசிம், அமீர் கான் நடித்த இந்தப் படம் தற்போது சீனாவில் வெளியாகி பல சாதனைகளைப் படைக்கும் முனைப்பில் உள்ளது.

உலகிலேயே அதிக திரையரங்குகள் கொண்ட சீனாவில் (41,000 திரையரங்குகளுக்கும் அதிகமாக) தற்போது அமீர் கானின் இந்தப் படம் தான் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று சீனாவில் வெளியான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம், இதுவரை $ 32.27 மில்லியன் வசூலித்துள்ளது. அதாவது முதல் நான்கு நாள்கள் வசூல் ரூ. 206 கோடி. 

முதல் நாளன்று ரூ. 44 கோடி வசூலித்த ($ 6.89 மில்லியன்) இந்தப் படம் அடுத்த மூன்று நாள்களில் ரூ. 67.26 கோடி ($ 10.54 மில்லியன்), 63 கோடி ($ 9.87 மில்லியன்), 31.71 கோடி ($ 4.97 மில்லியன்) என நான்கு நாள் வசூலாக ரூ. 206 கோடி ($ 32.27 மில்லியன்) சம்பாதித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வருடம் சீனாவில் வெளியான அமீர் கான் நடித்த டங்கல் படம் ரூ. 1234 கோடி வசூலித்து ($193 மில்லியன்) அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது (அதன் முதல் வார வசூல் - ரூ. 187 கோடி).

Story image

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 12 மடங்கு வசூலித்தது டங்கல். இந்நிலையில் டங்கல் பட வசூலை சீக்ரெட் சூப்பர்ஸ்டார் தாண்டுமா என்கிற ஆவலை முதல் நான்கு நாள் வசூல் உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.