நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மனிஷா கொய்ராலா, தன் வாழ்வில் கண்டடைந்த மிக மோசமான உண்மை!

‘உண்மையில் திரைப்படங்களில் நீங்கள் கண்டு ரசிக்கும் அத்தகைய உண்மையான காதலை நான் என் நிஜ வாழ்வில் காணவில்லை.

News image
Updated On :12 ஜூன் 2018, 2:18 pm IST

மனிஷா கொய்ராலா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் தனுஷின் மாப்பிள்ளை. தற்போது இந்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் சஞ்சய் தத் வாழ்க்கைச் சித்திரத்தில் அவரது தாயாரான நர்கீஸ் வேடத்தில் மனிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். நர்கீஸ், சஞ்சய் தத்தின் அம்மா மட்டுமல்ல பழம்பெரும் இந்தி நடிகையும் கூட. இந்தப் படத்தில் மனிஷா கமிட் ஆனதில் உருவ ஒற்றுமை தவிர மற்றொரு அதிசயிக்கத் தக்க ஒற்றுமையும் உண்டெனில் அது நர்கீஸின் மரணத்துக்கான காரணம் புற்றுநோய் என்பதே. மனிஷாவும் புற்றுநோயின் தாக்கத்தால் சில ஆண்டுகளுக்கு முன் மரணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்தவரே. சமீபத்தில் ‘சஞ்சு’ எனும் அந்த வாழ்க்கைச் சித்திரத்துக்கான ஆடியோ லாஞ்ச் மும்பையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட மனிஷாவிடம், ஏன் தற்போது காதல் நிறைந்த ரொமாண்டிக் திரைப்படங்களில் தங்களைக் காண முடியவில்லை எனும் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு மனிஷா கூறிய பதில்...

‘உண்மையில் திரைப்படங்களில் நீங்கள் கண்டு ரசிக்கும் அத்தகைய உண்மையான காதலை நான் என் நிஜ வாழ்வில் காணவில்லை. திருமணம் என்ற பந்தத்தின் பெயரால் காதலையும், அன்பையும், மரியாதையையும் எதிர்பார்த்து நான் ஏமாந்து விட்டேன். என்னால் பந்தத்தின் பெயரால் சுயமரியாதையை இழந்து வாழ முடியாது. எனக்கான மரியாதை மிக முக்கியம். திரைவாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி மரியாதையற்ற இடத்திலோ, உறவிலோ என்னால் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட உறவு எனக்குத் தேவையில்லை என்பதே என் வாழ்வில் நான் கண்டடைந்த மிக மோசமான உண்மை’ என பதிலளித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா.

Related Article

ரன்பீர் கபூருடன் காதலா? தங்கை அலியா பட் குறித்த கேள்விக்கு அக்கா பூஜா பட்டின் ‘நச்’ பதில்!

மஞ்சு வாரியரின் தந்தை மரணம், மகள் மீனாட்சியுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் நடிகர் திலீப்!

ஸ்ரீதேவி மகள் ஜான்வி அறிமுகமாகும் படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பாட்டியானார் ராதிகா சரத்குமார்!

என் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா!

துருவ நட்சத்திரம் படம் தாமதமாவது ஏன்: கெளதம் மேனன் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.