காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆயிரம் கோடி செலவில் உருவாகும் 'மகாபாரதம்' படத்தில் இவர்தான் பீமன்!

'பாகுபலி' படத்துக்குப் பின் பிரபாஸ் ஹிந்தியிலும் பிரபலமானார். நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2018, 5:29 am

DIN

'பாகுபலி' படத்துக்குப் பின் பிரபாஸ் ஹிந்தியிலும் பிரபலமானார். நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆமிர்கான் பிரபாஸுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். ஆயிரம் கோடி செலவில் உருவாகும் 'மகாபாரதம்' படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரை கேட்டிருக்கிறார். அந்த அழைப்பை பிரபாஸ் ஏற்றிருக்கிறார். மகாபாரதம் படத்தில் பிரபாஸ் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க கேட்டதாக முதலில் கூறப்பட்டது.

Story image

தற்போது அவர் பீமன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை யார் ஏற்பது என்று முடிவாகாத நிலையில் இதில் நடிக்கும் நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஆமீர்கான் ஏற்றிருக்கிறார். அதற்காக அவர் அமிதாப்பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

***

எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை விளக்கும் விதமாக ஒரு ஓவியர் பென்சில் ஸ்கெட்ச் வரைந்து அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.

Story image

தசரதனாக அமிதாப்பச்சன், பீமனாக பிரபாஸ், கிருஷ்ணராக ஆமீர்கான், திரௌபதியாக தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிக்க ரஜினிக்கு ஆமீர்கான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ரஜினி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.