அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

மேனகாவிடம் என் அம்மாவைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி சொன்னேன்: நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி!

ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல கீர்த்தி என் அம்மா சாவித்ரியின் இயல்புகள் ஒவ்வொன்றையும் அப்படியே நான் அளித்த தகவல்களில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Published On :

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதை ‘மகா நடி’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் இந்த மாதம் 9, 11 தேதிகளில் வெளியிடப்பட்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை சாத்தியப்படுத்தியமைக்காக அதன் இயக்குனர் நாக் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர்களான ப்ரியங்கா தத், அஷ்வின் தத் உள்ளிட்டோர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தன் அம்மா சாவித்ரி குறித்து இப்படி ஒரு அருமையான வாழ்க்கைச் சித்திரத்தை இயக்கி மறைந்த தனது தாயாரை மீண்டும் ரசிகர்கள் நெஞ்சில் வாழ வைத்த பெருமை நாக் அஷ்வினுக்கே சேரும் என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெக்குருகிப் பாராட்டியுள்ளார்.

Story image

இத்திரைப்படத்துக்காக படத்தின் இயக்குனர் மட்டுமல்ல நடிகை கீர்த்தி சுரேஷும் கூட தன்னிடம் அலைபேசியில் பேசாத நாளில்லை. தினமும் ஃபோன் செய்து; சாவித்ரி எப்படி நடப்பார், எப்படித் தலைவாருவார்? எப்படி ஸ்டைலாகக் கார் ஓட்டுவார்? எப்படி சமைப்பார்? எப்படிச் சிரிப்பார்? எப்படிப் பேசுவார்? எப்படியெல்லாம் நண்பர்களை உபசரிப்பார்? என்றெல்லாம் கீர்த்தி தன்னிடம் கேட்டுக் கொள்ளாத நாளில்லை. அந்த அளவுக்கு ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல கீர்த்தி என் அம்மா சாவித்ரியின் இயல்புகள் ஒவ்வொன்றையும் அப்படியே நான் அளித்த தகவல்களில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தை திரையில் காணும் போது நான் கீர்த்தியைக் காணவே இல்லை. என் அம்மாவைத் தான் பார்த்தேன். அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது கீர்த்தியின் நடிப்பு. இதற்காக நான் மேனகாவுக்கு நன்றி சொன்னேன்.

‘ என் அம்மாவைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி’ என்று மேனகாவிடம் நான் கூறினேன். என்று நடிகை கீர்த்தி சுரேஷை மனமுருகிப் பாராட்டினார் சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.

மறைந்த நடிகை சாவித்ரிக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.

Related Article

தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்

‘டங்கல்’ சிறுமி சாய்ரா வாஸிமின் அதிர்ச்சியூட்டும் சமூக ஊடகப் பகிர்வு!

ஆண்குழந்தைகளும் பாலியல் வன்முறை குறித்துப் பேச வெட்கப்படத்தான் செய்கிறார்கள்: சொல்கிறார் பிரபல மாடல்!

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான சந்தேக மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு!

மனம் திறந்து பேசுவதில் அன்றும், இன்றும் குஷ்பூவை யாராலும் மிஞ்ச முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.