திரைப்பட தேசிய விருதுகள்: புதிய அறிவிப்பு!
திரைப்பட தேசிய விருதுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் இதன் முடிவுகள் தேர்தலுக்குப் பிறகு


திரைப்பட தேசிய விருதுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் இதன் முடிவுகள் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...