

கடந்த ஆண்டு வெளியான கேஜிஎஃப் 1 மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பலே பிலிம்ஸ், இதன் இரண்டாம் பாகத்தின் முதல் போஸ்டரை அண்மையில் வெளியிட்டது.
படத்தின் முதல் பகுதியில் நடிகர் யஷ் கருடாவை வீழ்த்தி கே.ஜி.எஃப்-பின் தலைவரானது போல முடிவடைந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த போஸ்டரில் அவர் பெல் பாட்டம் உடையணிந்து சுரங்கத் தொழிலாளர்களுடன் இணைந்து 'ஒரு பேரரசை மீண்டும் உருவாக்குவோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் காட்சியளிக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் அதீரா என்ற மர்மமான கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக சித்திரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் நடிகிறார்.
பிரசாந்த் நீல் இயக்கும், கேஜிஎஃப் 2 படத்துக்கு ரவி பஸ்ரூரின் இசையையும், புவன் கவுடாவின் ஒளிப்பதிவையும் செய்கிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றம்!

எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்

மன உறுதியும் விடாமுயற்சியும்... ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

