திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

'ஜனவரி 18 முதல் சேனாபதி'- இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்

பொங்கல் திருநாளன்று ரசிகர்களுக்கு இனிய விருந்து அளிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர், பொங்கல் வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :15 ஜனவரி 2019, 3:16 pm IST

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றிபெற்ற படம் இந்தியன். லஞ்சம், ஊழல் ஆகியவை படத்தின் மையக்கருவாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் கமல்ஹாசன் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்திருந்தார். மேலும் தந்தை, மகன் என இரட்டை வேடம். 

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்துக்காக கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசைமைக்கிறார். துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளன்று ரசிகர்களுக்கு இனிய விருந்து அளிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர், பொங்கல் வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.