ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தன்னாட்சி குறித்து ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்! : ரசிகர்கள் ஆச்சர்யம்!

பொதுவாக, சமகால நடப்பு குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்கும் ரஹ்மான்...

News image
Updated On :4 ஜூன் 2019, 10:56 am

எழில்

மும்மொழி கொள்கைக்கு எதிராக ட்வீட் செய்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்போது, தன்னாட்சி குறித்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியைக் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது. இது, தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக  பல்துறை சார்ந்த பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே கல்விக் குழுவின் வரைவை முன்னெடுத்துச் செல்லும் என மத்திய அரசின் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று பதிவு செய்தார். அதில், அழகிய தீர்வு. தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், AUTONOMOUS (தன்னாட்சி) என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்து, அதற்கான அர்த்தம் குறித்த கேம்ப்ரிட்ஜ் ஆங்கில அகராதியின் இணைப்பையும் கொடுத்துள்ளார் ரஹ்மான்.

ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரைக்கு எதிராக முதலில் ட்வீட் செய்த ரஹ்மான், இப்போது தன்னாட்சி குறித்து ட்வீட் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பொதுவாக, சமகால நடப்பு குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்கும் ரஹ்மான், அடுத்தடுத்த நாள்களில் அரசியல் பதிவுகளை தனது ட்விட்டர் கணக்கில் வெளிப்படுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.