நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும்! பாலிவுட் இயக்குநர் அனுராக் பாராட்டிய படம் இதுதான்!

தமிழ் சினிமாவை எப்போது ஆழ்ந்து கவனிப்பவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். எந்தப் படம் பிடித்திருந்தாலும், அந்த இயக்குநரை அழைத்துப் பாராட்டுவார்.

News image
Updated On :25 மார்ச் 2019, 5:45 am

DIN

தமிழ் சினிமாவை எப்போது ஆழ்ந்து கவனிப்பவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். எந்தப் படம் பிடித்திருந்தாலும், அந்த இயக்குநரை அழைத்துப் பாராட்டுவார். அவ்வப்போது தமிழில் வரும் சில படங்களைப் பார்த்துவிட்டு தனது விமர்சனங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார்.

Story image

இந்த நிலையில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை இவர் சமீபத்தில் பார்த்துள்ளார். இது குறித்து அனுராக் காஷ்யப் பதிந்துள்ள தகவல், 'இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதனால் படத்தில் வரும் காட்சிகளைப் பற்றிக் கூற முடியாது. ஆனால் இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும். இதில் பணியாற்ற முடியாமல் போனதற்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

படத்தில் திரைக்கதையை மிஷ்கின், நலன் குமாரசாமியுடன் சேர்ந்து தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார். அனுராக் காஷ்யப்பையும் திரைக்கதை எழுத தியாகராஜன் குமாரராஜா அழைத்திருந்தார். ஹிந்திப் படங்களில் பரபரப்பாக இயங்கி வந்ததால் அவர் இதில் பணியாற்றவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.