ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை காலமானார்!

வீரு தேவ்கனின் மறைவுக்குப் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்...

News image
Updated On :27 மே 2019, 10:11 am

எழில்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வீணா தேவ்கன் என்கிற மனைவியும் அஜய் தேவ்கன், அனில் தேவ்கன் என இரு மகன்களும் நீலம், கவிதா என இரு மகள்களும் உள்ளார்கள். 

1941-ல் பஞ்சாப்பில் பிறந்த வீரு தேவ்கன், 80-க்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார். 1999-ல் ஹிந்துஸ்தான் கி கசம் என்கிற படத்தைத் தயாரித்து, இயக்கினார். அதில் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், மனீஷா கொய்ராலா, சுஷ்மிதா சென் போன்றோர் நடித்திருந்தார்கள். சில படங்களிலும் நடித்துள்ளார் வீரு தேவ்கன். 

வீரு தேவ்கனின் மறைவுக்குப் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.