ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இசைக்கச்சேரி ஒத்திகையின்போது இளையராஜா - எஸ்பிபி சந்திப்பு! நெகிழ்வான தருணங்களின் புகைப்படங்கள்!

இருவரும் நீண்ட நாளுக்குப் பிறகு சந்தித்ததால் கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர்..

News image
Updated On :27 மே 2019, 9:16 am

எழில்

இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில்  இசை கொண்டாடும் இசை என்ற இளையராஜாவின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரியில், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த இளையராஜாவும், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து  ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. மட்டுமல்லாது, கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள்  பங்கேற்று பாடவுள்ளனர். 

2017-ம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

பிறகு கடந்த வருடம் செப்டம்பர் மாதம், தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்தார். 

இந்நிலையில் வரும் ஜூன் 2 அன்று இருவரும் ஒரே மேடையில் தோன்றி, ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் மேற்பார்வையில் இன்று நடைபெற்ற இசைக் கச்சேரி ஒத்திகையில் எஸ்பிபி கலந்துகொண்டார். இருவரும் நீண்ட நாளுக்குப் பிறகு சந்தித்ததால் கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்கள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.