போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பரிசுத்தொகை எல்லாம் ஒரு விஷயமே இல்லை: ரூ. 1 கோடி சம்பளம் பெறவுள்ள பிக் பாஸ் போட்டியாளர்!

ஒரு போட்டியாளரின் சம்பளத்தைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்...

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 10:27 am

எழில்

ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த வருட நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிந்தி பிக் பாஸ் 13 போட்டியை அறிமுகப்படுத்தினார் சல்மான் கான். வரும் ஞாயிறு முதல் (செப்டம்பர் 29) கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஞாயிறு அன்று 9 மணிக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறக்கூடிய போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரு போட்டியாளரின் சம்பளத்தைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

நடிகை ரஷாமி தேசாய், தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். நடிகை ரஷாமி தேசாய், 2012-ல் நடிகர் நந்திஷ் சாந்துவைத் திருமணம் செய்தார். எனினும் இரு வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டார்கள். 

இந்நிலையில் ரஷாமி தேசாய்க்கு ரூ. 1.20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருட ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை வென்ற நடிகை தீபிகா ககாருக்குப் பரிசுத் தொகையாக ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது ரஷாமி தேசாயின் சம்பளம் குறித்த தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த வருட ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகச் சம்பளம் பெறுபவர், ரஷாமி தேசாய் தான் என்றும் கூறப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.