பிக் பாஸ் தெலுகு சீஸன் 3 யில் இடம்பெறவிருக்கும் போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கா உங்களுக்கு? இங்கே கீழே உள்ள லிஸ்டில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார்கள்.
1. நடிகர் தருண்

2. பாடகர் ஹேமச்சந்திரா

3. தீன்மார் சாவித்ரி

4. ஆங்கர் உதயபானு

5. ஸ்ரீ ரெட்டி

6. ஆங்கர் விவா ஹர்ஷா

7. K A பால்

8. ஆங்கர் ஸ்ரீமுகி

9. ஆங்கர் லஸ்யா

10. மஹா தல்லி புகழ் ஜானவி

11. ரகு மாஸ்டர்

12. பாடகர் ராகுல்

13. வருண் சந்தேஷ்

14. காமன் மேன் ஒருவர்.
???
என மொத்தம் 14 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல். இந்த லிஸ்டில் மேலும் இருவரது பெயர் பரிந்துரையில் இருந்தாலும் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தங்களது விருப்பமின்மையைத் தெரிவித்து விட்டதாகத் தகவல். அந்த இருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் மற்றும் ஆங்கர் சுமா கனகலா. தெலுகில் இதுவரை தமிழைப் போலவே இரண்டு பிக் பாஸ் சீஸன்கள் நடந்து முடிந்துள்ளன. சீஸன் 1 ஐ ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கினார். சீஸன் 2 வை நேச்சுரல் ஸ்டார் நானி தொகுத்து வழங்கினார். தற்போதைய சீஸன் 3 ஐ தொகுத்து வழங்கவிருப்பது நடிகர் நாகார்ஜுனா என்று தகவல். பிக் பாஸ் தெலுகு சீஸன் 1 ல் வென்று பிக் பாஸ் கோப்பையை வீட்டுக்கு எடுத்துச் சென்றவர் நடிகர் சிவ பாலாஜி, பிக் பாஸ் சீஸன் 2 ஐ வென்றவர் நடிகர் கெளஷல் மண்டே! இனி வரவிருக்கிறது சீஸன் 3. இதில் யார் ஜெயித்து கோப்பை சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஜூலை 21 முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீஸன் ட்3 ஒளிபரப்பாகவைருப்பதாகத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



