அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: குணமடைந்தார் அபிஷேக் பச்சன்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 9:51 am

DIN

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.

இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

இன்று மதியம், எனக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. கரோனாவை என்னால் வெல்ல முடியும் என்று சொன்னேன் அல்லவா! எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.