அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செப்டம்பர் 6 முதல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம்!

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும் சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9 மணிக்கும்...

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 11:39 am

DIN

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி செப்டம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.

பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல் நடித்த இந்நிகழ்ச்சி தொடர்பான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி செப்டம்பர் 6 முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வருடம் இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

செப்டம்பர் 6 அன்று மட்டும் மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. மற்றபடி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும் சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9 மணிக்கும் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக திங்கள் முதல் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன் என நடிகர் நாகார்ஜூனா ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.