சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

‘இந்தியன் 2’ விபத்தில் பலியான கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன்: ஃபேஸ்புக்கில் நண்பர்கள் இரங்கல்!

நேற்றைய சம்பவத்தில் உயிரிழந்த ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:55 pm

DIN

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத், ஒளிப்பதிவு - ரத்னவேலு.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

பூந்தமல்லி அருகே உள்ள இ.வி.பி. பொழுதுபோக்குப் பூங்காவில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் போன்றோர் தொடர்புடைய காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர். 

Story image

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, படப்பிடிப்பு ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஒரு பெண் உள்பட 9 பேர் காயமடைந்தார்கள். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து லைகா நிறுவனமும் கமலும் ட்வீட் செய்து தங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை காவல்துறை விசாரணை செய்துவருகிறது. 

இந்நிலையில் நேற்றைய சம்பவத்தில் உயிரிழந்த ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். மதனின் இளைய மகள் அமிதாவும் கிருஷ்ணாவும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் இணைந்து பல விளம்பரப் படங்களை எடுத்துள்ளார்கள். 

ஃபேஸ்புக்கில் ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி, கிருஷ்ணா பற்றி எழுதியதாவது: கடந்த வாரம் மதன் சாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரைப் (கிருஷ்ணா) பற்றி பேசிக்கொண்டிருந்தார். மதன் சாரை கிருஷ்ணா எந்தளவுக்குக் கவனித்துக் கொள்கிறார் என்றும் அவருடைய அன்பான குணத்தையும் பற்றி பேசினார். ஏதோ நடக்கப் போகிறது என்கிற உள்ளுணர்வால் தான் மதன் சார் அப்படிப் பேசினார் போல என்று எழுதியுள்ளார். அதேபோல கிருஷ்ணாவுடன் பணியாற்றிய மகேஷ் ஜானகிராமனும் கிருஷ்ணா பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.