கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுசாந்த் சிங் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர வேண்டும்: நடிகை ஸ்வரா பாஸ்கர்

பல்வேறு விவாதங்களில் சுசாந்த் சிங்கின் பெயரை இழுத்ததால் அவருடைய குடும்பத்தினரிடம் ...

News image
Updated On :22 ஜூலை 2020, 12:19 pm

DIN

பல்வேறு விவாதங்களில் சுசாந்த் சிங்கின் பெயரை இழுத்ததால் அவருடைய குடும்பத்தினரிடம் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை ஸ்வரா பாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

சுசாந்த் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் அரசியல் தான் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். வாரிசுகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுவதால் வெளி ஆள்களால் பாலிவுட்டில் ஜெயிக்க முடியவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றியுள்ளார்கள். பாலிவுட் நட்சத்திரங்களுக்கிடையே இது பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்வரா பாஸ்கர் ட்விட்டரில் எழுதியதாவது:

நமது விவாதங்களில் சுசாந்த் சிங்கின் பெயரை பல முறை இழுத்துள்ளோம். இதனால் சுசாந்த் சிங்கின் குடும்பத்தினரிடம் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். சுசாந்த் சிங்கின் புதிய படம் வருகிறது. நாம் இழந்த அற்புதமான மனிதரின் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.