அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாடகரின் மகனுக்கு கரோனா

தன்னுடைய மகன் துருவ், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்...

News image
Updated On :24 ஜூலை 2020, 11:43 am

DIN

பாலிவுட் பாடகர் அபிஜீத் பட்டாசார்யாவின் மகனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

1980களில் பாலிவுட்டில் பாடகராக அறிமுகமான அபிஜீத் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 

இந்நிலையில் தன்னுடைய மகன் துருவ், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

வெளிநாட்டுக்கு என்னுடைய மகன் செல்லவிருந்தார். அதற்காக அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் தான் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருக்குப் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லை. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கவலைப்பட ஒன்றுமில்லை.

நான் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறேன். கொல்கத்தாவில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும், இதனால் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.