இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

விவேக்கின் இல்லத்துக்குச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்...

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 8:42 am

DIN


ஜார்ஜியாவிலிருந்து சென்னைக்குத் திரும்பியுள்ள நடிகர் விஜய், விவேக்கின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். விவேக்கின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்தார். இந்நிலையில் ஜார்ஜியாவிலிருந்து திரும்பிய விஜய், இன்று காலை விவேக்கின் இல்லத்துக்குச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இத்தகவலை விஜய்யின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.