/

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :18 டிசம்பர் 2021, 5:29 am

DIN

விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தக் கூட்டணியுடன் சமந்தாவும் இணைந்துள்ளார். அனிருத் இசையில் இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

Story image

இந்தப் படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் ஸ்ரீசாந்த் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.