

சன் தொலைக்காட்சியில் சமுத்திரக்கனி நடித்த வெள்ளை யானை படம் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் செயல்படாத நிலையில் ஓடிடியிலும் தொலைக்காட்சியிலும் நேரடியாகப் படங்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் சமுத்திரக்கனி நடித்த படமும் இணைந்துள்ளது.
நாங்க ரொம்ப பிஸி, புலிக்குத்தி பாண்டி, ஏலே, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளே ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகின.
இந்நிலையில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை படம் திரையரங்கில் வெளியாகமல் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது. வரும் ஞாயிறன்று மதியம் 3 மணிக்கு வெள்ளை யானை படம் ஒளிபரப்பாகிறது. இதற்கான விளம்பரம் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.