அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'பீஸ்ட்' - 'சர்தார்' சந்திப்பு: கார்த்தியை அடையாளம் தெரியாமல் தவிர்த்த விஜய்

'பீஸ்ட்' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யை, நடிகர் கார்த்தி சந்தித்து உரையாடினார். 

News image
Updated On :18 ஜூலை 2021, 11:32 am

DIN


'பீஸ்ட்' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யை, நடிகர் கார்த்தி சந்தித்து உரையாடினார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படம், இரண்டு வாரங்களுக்கு முன் பாடல் காட்சியுடன் மீண்டும் துவங்கியது. இந்த பாடல் காட்சியில் பங்கேற்க நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் அவரை எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.  

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படமும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகில் படமாக்கப்பட்டுவந்துள்ளது. இதனையடுத்து நடிகர் கார்த்தி, விஜய்யை சந்திக்க பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததால், நடிகர் விஜய்க்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அதனால் கார்த்தியை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

பின்னர் தான் கார்த்தி என அறிமுகப்படுத்தியவுடன், ஆச்சரியமான விஜய், அவரைக் கட்டிப்பிடித்து பாராட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.