அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'விக்ரம்': கமல் - விஜய்சேதுபதியுடன் இணையும் மற்றொரு நடிப்பு ராட்சசன் - வெளியான புகைப்படம்

விக்ரம் படத்தில் இணைந்த நடிகர் ஃபகத் ஃபாசில், கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

News image
Updated On :25 ஜூலை 2021, 6:24 am

DIN

விக்ரம் படத்தில் இணைந்த நடிகர் ஃபகத் ஃபாசில், கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

'மாஸ்டர்' பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுடன்'விக்ரம்' படத்துக்காக இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. அப்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் கமல்ஹாசன் நடுவே இருக்க, அவருக்கு இரண்டு பக்கமும் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இடம்பெற்றிருந்தனர். இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் விரைவில் இணைவார் என்று அப்போது கூறப்பட்டது. 

இந்த நிலையில்  விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். இருவருக்குமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

ஒரு படத்தில் நமக்கு பிடித்த ஒரு நடிகர் இடம்பெற்றிருந்தாலே, நமக்கு அந்தப் படத்தை விரைவில் காணும் ஆவல் எழும். இந்தப் படத்தில் மூன்று மாபெரும் நடிப்பு ராட்சசர்கள் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

மேலும் மாஸ்டர் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தாலும், பொதுவான ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டதை அந்தப் படத்தின் மீதான விமர்சனங்களில் காணமுடிந்தது. காரணம் அந்தப் படம் 50 சதவிகிதம் விஜய் படமாகவும், 50 சதவிகிதம் தனது படமாகவும் எடுத்திருந்தார் லோகேஷ்.

ஆனால் இந்த முறை முழுமையாக லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என விக்ரம் படத்தில் இணை கதாசிரியராக பணிபுரியும் இயக்குநர் ரத்ன குமார் கூறியிருந்தார். இதனையடுத்து இந்தப் படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் முழுமையாக கவரும் என நம்புவோம். இதனைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.