விஜய் நடிக்கும் பீஸ்ட்: 2-வது போஸ்டர் வெளியீடு
ரசிகர்கள் உற்சாகமாக இரு போஸ்டர்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கான இரு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இன்று தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன்பிறகு மற்றொரு போஸ்டரும் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமாக இரு போஸ்டர்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...