இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குஷி கிளைமாக்ஸில் விஜய், ஜோதிகாவிடம் செல்போன் இருந்திருந்தால்?: எஸ்.ஜே. சூர்யா பதில்

எது கிளைமாக்ஸோ அதற்கேற்றாற்போல காட்சிகளை உருவாக்கிவிட வேண்டும்...

News image
Updated On :28 மே 2021, 9:07 am

DIN


குஷி படம் நடைபெற்ற காலகட்டத்தில் செல்போன் இருந்திருந்தால் கடைசிக்காட்சி எப்படி அமைந்திருக்கும் என இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பதில் அளித்துள்ளார்.

விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய படம் - குஷி. 2000-ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியை அடைந்தது.

செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே 'குஷி' படம் முடிஞ்சிருக்கும், ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது என்கிற கேள்வி குஷி படத்தின் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவிடம் ட்விட்டரில் கேட்கப்பட்டது.

இதற்கு எஸ்.ஜே. சூர்யா பதில் அளித்ததாவது:

அப்படியெல்லாம் இல்லை. மனசு வலியில் இருவரும் செல்போனைத் தொலைத்துவிட்டதாகக் காண்பித்தால் போயிற்று. நண்பர்களுக்கு மாறி மாறி போன் செய்தால், ஷிவா ஸ்டேஷனுக்குப் போய்விட்டான், ஜென்னி ஸ்டேஷனுக்குப் போய்விட்டாள் என்று சொல்லவேண்டும். அவ்வளவுதான். எது கிளைமாக்ஸோ அதற்கேற்றாற்போல காட்சிகளை உருவாக்கிவிட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.