இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரபல நடிகரின் திடீர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் பகிர்ந்து இரங்கல் 

பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 அக்டோபர் 2021, 9:51 am

DIN

பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மிகப்பெரிய இதிகாச தொடரான ராமாயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர். இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. எதிர்மறை கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பாற்றலால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார். 

ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் கடந்த 1991 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியாக இருந்துள்ளார். மேலும் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர். 

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அரவிந்த் திரிவேதி நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82. அவரது மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரவிந்த் திரிவேதியின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில், சிறந்த நடிகரும், சமூக சேவகருமான அரவிந்த் திரிவேதியை இழந்து விட்டோம். தலைமுறைகள் கடந்து ராமாயணம் தொடருக்காக அவர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.