திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமந்தாவின் புதிய படம் குறித்து அதிரடி அறிவிப்பு : வெளியான புகைப்படம்: பிரபலங்கள் வாழ்த்து

சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். 

News image
Updated On :15 அக்டோபர் 2021, 4:49 pm IST

சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். 

நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து இருவரது பிரிவுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் நடிகை சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி, தீரன் அதிகாரம் ஒன்று என்ஜிகே ஆகிய படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார். 

Story image

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சாந்த ரூபன் எழுதி, இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவகாரத்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர இந்தப் படம் சமந்தாவுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதனையடுத்து மாளவிகா மோகனன், உமா ரியாஷ்கான் உள்ளிட்டோர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.